மீண்டும் மன்னாரில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் -பிள்ளையார் சிலை சேதம் !!!
மன்னார் பிரதேச செயலக பிரிவு தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது
திருகேதீஸ்வரம் தள்ளாடி வீதி அருகில் அமைந்துள்ள பிள்ளையார் சிற்றாலயமே மேற்படி சேதமாக்கப்பட்டுள்ளது சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது
அதே நேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் விறகுகளால் மூடப்பட்டு அவமரியாதைபடுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது
குறித்த சிற்றாலயமானது தொடர்சியாக இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்படுவதும் சேதப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.....
மீண்டும் மன்னாரில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் -பிள்ளையார் சிலை சேதம் !!!
Reviewed by Author
on
June 21, 2020
Rating:

No comments:
Post a Comment