கொரோனா பாதிப்பின் காரணமாக “மன்னார் மாந்தை மேற்கு உதவுங்கரங்கள்” இனால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு.......
ANNARTNA Mr&Mrs.Ratnsinhan Annapooranm அவர்களின் ஞாபகர்த்தமாக அடம்பனை சொந்த இடமாகவும் புலம்பெயர்ந்து வாழும் அன்னாரின் பிள்ளைகளின் பங்களிப்புடன்“மாந்தை மேற்கு உதவுங்கரங்களினால்“ தற்போதைய கொரோனா பாதிப்பின் நிமிர்த்தம் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பும் இவ்வேளை அவர்களின் உணவுத் தேவையின் நிமிர்த்தம் ரூபா 1500/- பெறுமதியான உணவுப்பொதிகள் அடம்பனை சூழவுள்ள 100 குடும்பங்களுக்கு இன்று (2020-06-03)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உயர் திரு.செ.கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உதவிய உறவுகளின் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை நண்பர்களாகிய திரு.குலநாயகம், திரு.திருஞானம்,அடம்பன் பண்ணை ஸ்தாபகர் நா.உருத்திரமூர்த்தி,கிராம உத்தியோகத்தர் திரு.வி.செல்வக்குமரன்,அடம்பன் கிராம உத்தியோகத்தர் திரு.சி.சிறி,கன்னாட்டி கிராம உத்தியோகத்தர் திரு.S.சந்தியோகு உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக “மன்னார் மாந்தை மேற்கு உதவுங்கரங்கள்” இனால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு.......
Reviewed by Author
on
June 03, 2020
Rating:

No comments:
Post a Comment