கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய நடைமுறை.......
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வருபவர்களுக்கு இன்று
முதல் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்னா
ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை ஹோட்டல்கள் அல்லது வேறு
தங்குமிடத்திற்கு அழைத்து சென்று இந்த பரிசோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குவைத் நாட்டில் இருந்து வந்த பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளதென அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர்
மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய நடைமுறை.......
Reviewed by Author
on
June 02, 2020
Rating:

No comments:
Post a Comment