அறிமுகமாகும் Big Boss புகழ் லாஸ்லியாவின் முதல் படம்.........
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் – பிரண்ட்ஷிப்.
அர்ஜூன், லாஸ்லியாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் நடிக்கிறார். இயக்கம் – ஜான் பால் ராஜ் ஷாம் சூர்யா.
இந்தப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்திலும் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். தமிழ் ட்வீட்கள் மூலம் சமூகவலைத்தளத்தில் தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ்ப் படங்களில் இனி அடிக்கடி இடம்பெறப் போகிறார் எனத் தெரிகிறது.

1 comment:
Out of all of the subgenres of reality TV, the documentary subgenre is likely the maximum fashionable one.Bigg Boss 14
Post a Comment