மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன்.......
பன்சல்கொடல்ல, வான்எல, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மஹிந்த ஜெயலத் பண்டார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்மெட்டியாவ குடியிருப்பு பகுதியின் பின்னாலுள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் வியாழக்கிழமை (11) மாலை புதைக்கப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்ட நிலையிலே சந்தேகத்தில் பெண்ணின் கணவரை கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சந்தேக நபர் தனது இரண்டாவது மனைவியான மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த இந்திராணி மில்வான என்பவரை கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிஅளவில் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து விட்டு தனது வீட்டுக்கு பின்னாலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிஸில் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
பின்னர் குறித்த உரிய வீட்டில் குடியிருந்து வந்த குடும்ப பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கொலைச் சம்பவம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் மரணமான பெண்ணின் கணவரை கைது செய்து கந்தளாய்
நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபரை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது...
மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன்.......
Reviewed by Author
on
June 14, 2020
Rating:

No comments:
Post a Comment