இலங்கை இராணுவத்தின் 55 ஆவது தலைமை அதிகாரியாக ஜெனரல் ஜகத் குணவர்தன.......
இலங்கை இராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இராணுவத்தின் 55 ஆவது அலுவலக தலைமை அதிகாரியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, இராணுவத்தின் பதில் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ இன்று பொறுப்பேற்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியாக ரசிக பெர்னாண்டோ இதுவரை கடமையாற்றினார்.
இதேவேளை, கொஸ்கம சீதாவக்க பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் 42 ஆவது படை நிறைவேற்றதிகாரியாக மேஜர் ஜெனரல் டீ.எஸ் பன்சஜய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 55 ஆவது தலைமை அதிகாரியாக ஜெனரல் ஜகத் குணவர்தன.......
Reviewed by Author
on
June 02, 2020
Rating:

No comments:
Post a Comment