தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாக பிரித்தானியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்....
1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் இதற்கான கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இலக்கம் 13, ஹைட்பார்க் கார்டன்ஸ் இல் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு 37 வருடங்கள் ஆன பின்பும் சர்வதேசம் இதனை இனப்படுகொலை என ஏன் இன்னும் பிரகடனப்படுத்தவில்லை என்பதனை இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
நாட்டில் நிலவும் அசாதாரன சூழலிலும் தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு வேண்டியும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும், பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 வழிகாட்டுதலின் படி ஆர்பாட்டகார்ர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment