அண்மைய செய்திகள்

recent
-

30 ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்: இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்த அரசாங்கமே எமது அரசாங்கம்......

"இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுவரெலியா அல்பைன் ஹோட்டலில் நேற்று (26) நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர், தற்போது இன, மத பேதமின்றி இளைஞர் யுவதிகள் ஒரு கட்சியில் இணைந்திருப்பார்களாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே என்று குறிப்பிட்டார்.

இந்நாட்டின் இளைஞர்கள் குறித்து பேசும்போது பிரேமதாச யுகத்தை மறக்க முடியாது. 1988 மற்றும் 1990 ஆகிய காலப்பகுதிகளில் பிரேமதாச அரசாங்கத்தின் பயங்கரவாதத்தில் நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர்.

அவ்வாறான யுகமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம். ஒருநாள் நான் தங்காலையிலிருந்து மாத்தறை நீதிமன்றத்திற்கு செல்லும் வரை இறந்தவர்களின் உடல்களின் எண்ணிக்கையை எண்ணினேன். மாத்தறைக்கு செல்லும்போது இறந்தவர்களின் 28 உடல்கள் காணப்பட்டன.

30 ஆண்டுகள் நீடித்த யுத்த காலத்தில் உங்களது பெற்றோரின் பைகளை பேருந்துகளில் சோதனை செய்வார்கள். அதிக சன நெரிசல் மிகுந்த பேருந்துகளில் செல்லும் வழியில் சோதனை செய்வார்கள்.

அவ்வாறான யுகமொன்றையே நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் தொடர்ந்தும் நீடித்திருந்தால் இன்றும் நாளையும் அதே செயற்பாடே நீடித்திருக்கும். அவ்வாறான நிலையை எம்மால் இல்லாதொழிக்க முடிந்தது.

ஆட்சிக்கு வந்து நாங்கள் என்ன செய்தோம் என்று சிலர் கேட்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை தொடங்கினாலும், தேர்தல் ஆணையாளர் அதனை நிறுத்தினார். அது மாத்திரமன்றி, ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இப்போது நியமனம் வழங்குவது மாத்திரமே எஞ்சியுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையாளர் அதையும் தேர்தல் முடியும்வரை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வேலைவாய்ப்புகளும் கூட இலஞ்சமாக கருதப்பட வாய்ப்புள்ளது என அதற்கு காரணம் கூறுகிறார்.  நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தினோம்.

ஆனால், 2015ஆம் ஆண்டின் பின்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாது சென்றது. அந்த வாய்ப்பை நாம் மீண்டும் பெற்றுக் கொடுப்போம். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். தொழில்நுட்ப கல்லூரிகளை மேம்படுத்தியது இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைக்கு திறமையும் திறமைக்கு வேலைவாய்ப்பையும் பெற்று கொள்ளும் ஆற்றல் உள்ளமையாலேயே. இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்த அரசாங்கமொன்று இருக்குமாயின் அது எமது அரசாங்கமே.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறே அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கினார். அதற்கமையவே  ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

மத பேதம், இன பேதம், குல பேதம் இன்றி ஒன்றாக இணைந்துள்ள கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது. உங்களது வாக்கை தாமரை மொட்டிற்கு வழங்கவும். அதுபோன்றே மூன்று விருப்பு வாக்குகளையும் பாவிப்பது உங்கள் உரிமையாகும் என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது....

30 ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்: இளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்த அரசாங்கமே எமது அரசாங்கம்...... Reviewed by Author on July 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.