கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்....
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த பின்னர் புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றின் அறிகுறிகளாக முன்னர் சளி, இருமல், காய்ச்சல் மட்டுமே கூறப்பட்டன. தற்போது புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கியதன் தொடர்ச்சியாகத் வயிற்றுப்போக்கும் கொரோனா அறிகுறியாகத் தென்படுகிறது என கூறப்படுகிறது.
நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்குக்கூட கொரோனா தொற்றால் சர்க்கரையின் அளவானது 400ஐ கடந்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதேநேரம் அமெரிக்காவின் நோய்க்
கட்டுப்பாட்டு அமைப்பு கொரோனா அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், குமட்டல் தன்மை
மற்றும் வயிற்றுப்போக்கு என்பனவற்றை அறிவித்துள்ளது. இதேபோல் ஐசிஎம்ஆர்
அமைப்பும் வாசனை அல்லது சுவை தெரியாமல் இருப்பதையும் அறிகுறியாக
இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment