மாற்று தலைமைகளிடம் வாக்குகளை கொடுத்து நீங்கள் மண்டியிட்ட சமூகமாக மாறி விடாதீர்கள்
எனது கொள்ளை பிடிக்கவில்லை, எனது கட்சியை பிடிக்கவில்லை என்றால்
உங்களுடைய வாக்குகள் ஒரு தமிழ் தலைமைக்கு வழங்கப்பட வேண்டும். மாற்று
தலைமைகளிடம் வாக்குகளை கொடுத்து நீங்கள் மண்டியிட்ட சமூகமாக மாறி
விடாதீர்கள் என்கின்ற ஒரு உன்னதமான அரைகூவலை விடுக்கின்றேன் என சிறிலங்கா
பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வக்குமரன் டிலான்
தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
வன்னியில்
வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்ற ஒரு விடயத்தை எந்த ஒரு
காலத்திலும் தமிழ் மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி பெற்றுக்
கொள்ளாத காரணத்தினால் தான் இன்று நான் ஒரு வேட்பாளராக இந்த வன்னித் தேர்தல்
தொகுதியில் அரசோடு இணைந்து பயணிக்கின்றேன்.
-எனவே பாராளுமன்றம் செல்லும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த வன்னி மாவட்ட மக்கள் எனக்கு வழங்க வேண்டும்.
வன்னி
மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் சமூகமும் ஒரு அணியாக திரண்டு
எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதி நிதித்துவத்தை அரசோடு
அனுப்பி அவர்களுக்கான ஒரு நல்ல ஒரு அத்தியாயத்தை எழுத வேண்டும் என்பதே
என்னுடைய நோக்கமும் அதையே தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.
கடந்த
கால ஆட்சியாளர்களின் தவறினால் தான் இன்று வன்னி தேர்தல் தொகுதியில் பல
கட்சிகளும் பல சின்னங்களும் சுயேட்சைக்குழுக்களும் வலம் வந்து
கொண்டிருக்கிறார்கள்.
கடந்த கால ஆட்சியாளர்கள்
சரியான முறையிலே தமிழ் மக்களை வழிநடத்தி இருந்திருந்தால் இன்று 405
வேட்பாளர்களும் இல்லை. அதிலே நான் ஒரு வேட்பாளராகவும் இல்லை.
அவர்கள்
அவர்களுடைய பணிகளை சரியாக செய்திருந்தால் இன்று இவ்வாறான கட்சிகளும் ,
சுயேட்சைக்குழுக்களும், பதாதைகளை யாரும் ஏந்தி இந்த வன்னி தேர்தல்
தொகுதியில் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள்.
கடந்த
கால தமிழ் தலைமைகள் விட்ட தவறினால் தான் என்று இவ்வாறான கட்சிகளும்
இவ்வாறான வேட்பாளர்களும் இன்று வன்னித் தேர்தல் தொகுதியில் வலம் வந்து
கொண்டிருக்கிறார்.
நான் எந்த ஒரு காட்சியையும்
எந்த ஒரு கட்சியினுடைய தலைமையும் எந்த ஒரு கட்சி சின்னத்தையும் நான்
அவதூறாக கூறப் போவதில்லை என்ற ஒரு உண்மையை உங்களிடத்திலே கூறியுள்ளேன்.
இந்த வன்னி தேர்தல் தொகுதியானது ஒரு வியாபாரத்தின் தேர்தல் தொகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது .
-பணம் கொடுத்தால் வாக்குகளைப் பெறலாம் என்ற நோக்கில் பல வேட்பாளர்கள் இன்று வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த வன்னி தேர்தல் தொகுதி மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறேன்.
கடந்த
காலத்திலேயே நாங்கள் எவ்வாறான அபிவிருத்திகளை பெற்றிருக்கின்றோம.;
அபிவிருத்தி என்ற ஒரு தேர்தலுக்கான ஒரு தேடலின் தேர்தலை தேடலுடன் கூடிய ஒரு
தேர்தலை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வன்னித்
தேர்தல் தொகுதியில் 5 ஆசனங்களும் மேலதிகமாக ஒரு ஆசனம் வழங்கப்படும். ஆனால்
6 ஆசனங்களையும் 80 சதவீதமாக இருக்கின்ற நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்
என்று சொன்னால் வரப்போகின்ற 5 ஆசனங்கள் என்னுடைய சமூகமாக இருக்கின்ற போது
நான் அரசோடு இணைகின்ற போது 6 ஆவதாக அதுவும் எங்களுடைய சமூகம் தான் .
எங்களுடைய
சமூகத்தினுடைய அதுவும் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக
இருந்தாலும் சரி புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக
இருந்தார்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட நான் தயார். ஆனால் அவர்கள் தயாரா?
என்பது எனக்கு தெரியாது.
இம்முறை 50 சத வீதமான வாக்குகளை எந்த ஒரு கட்சியும் பெற்றுக்கொள்ள முடியாது.
405 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள்
வாக்குகளை சிதைப்பதினால் எந்த ஒரு கட்சியினாலும் அதிகமான வாக்குகளை
அதிகமான விகிதாசாரத்தை பெற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நான்
இன்று தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றேன் உங்களுக்கு தெரியும் இந்த
வன்னி தேர்தல் தொகுதியில் பல தமிழ் கட்சிகள் இருக்கின்றன.
பல
தமிழர்கள் வாழ்கின்றார்கள்.பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
செல்வக்குமரன் ஆகிய என்னை பிடிக்கவில்லை. எனது கொள்ளை பிடிக்கவில்லை, எனது
கட்சியை பிடிக்கவில்லை என்றால் நான் தமிழ் மக்கள் மத்தியில் தாழ்மையாக
இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்ளுகின்றேன் உங்களுடைய வாக்குகள் ஒரு தமிழ்
தலைமைக்கு வழங்கப்பட வேண்டும்.
மாற்று
தலைமைகளிடம் வாக்குகளை கொடுத்து நீங்கள் மண்டியிட்ட சமூகமாக மாறி
விடாதீர்கள் என்கின்ற ஒரு உன்னதமான அரைகூவலை விடுக்கின்றேன்.என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்....
மாற்று தலைமைகளிடம் வாக்குகளை கொடுத்து நீங்கள் மண்டியிட்ட சமூகமாக மாறி விடாதீர்கள்
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment