கொரோனா தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கான எச்சரிக்கை......
இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 26 அதிகாரிகள் அடங்குவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ´தண்டனைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவுக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..
அதன்படி குற்றாவாளிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமையவும் இது குற்றம் எனவும், சரியான தகவல்கள் தெரியாவிடின் அவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமையவும் இது குற்றம் எனவும், சரியான தகவல்கள் தெரியாவிடின் அவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
கொரோனா தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கான எச்சரிக்கை......
Reviewed by Author
on
July 16, 2020
Rating:

No comments:
Post a Comment