உழைப்பிற்கு ஊனம் தடையில்லை......
இலங்கையில் இடம் பெற்ற முப்பது ஆண்டு போர் மீளமுடியாத பல
வடுக்களை தமிழர் தாயக பகுதிகளில் விதைத்தது, பல லட்சம் உயிர்களை
பலியெடுத்தது ,இவை எல்லாம் கடந்து எம் இனம் மெல்ல
துளிர்கொள்ளத்துடிக்கின்றது
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
மன்னார்
அடம்பன் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாலிகள் வளாகமும் அதனால்
முன்னெடுக்கப்படுகின்ற சுயதொழில் முயற்சியும் ஆகும் 2009 ஆண்டு யுத்தம்
நிறைவுற்ற பின்னர் பலர் அங்கங்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்வாதாரம் இன்றி
உணவு இன்றி திக்கற்ற நிலையில் மன்னார் மாந்தை பகுதியில் வசித்து வந்த
நிலையில் குறித்த மாற்றுத்திறனாலிகள் வளாகம் அவர்களின் வாழ்வாதாரத்தை
வளப்படுத்தி வருகின்றது
தாங்கள்
வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தங்களுக்கு எதுவும் செய்ய
முடியாத வக்கற்றவர்கள் என்று அறிந்த நிலையில் யுத்ததாலும் அதே நேரத்தில்
இயற்கையாகவும் அங்கங்கள் செயல் இழந்தவர்களும் அங்கங்களை தாயக விடுதலைக்காய்
விதைத்தவர்களும் இணைந்து மாந்தை பிரதேச செயலாளரின் உதவியுடன் அடம்பன்
வேட்டையான் முறிப்பு பகுதியிலே சிறிய அளவிலான காணி ஒன்றை பெற்று அதில்
தங்களுடைய சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
கண்பார்வை குறைபாடுடைய கையை இழந்த சகோதரிகள் தோட்ட செய்கையில் ஈடுபடுவதை பார்கும் போது மெய் சிலிர்த்துப் போகின்றது
ஊணம் என்பது உடலால் மட்டுமே உள்ளத்தால் இல்லை என்பதற்க்கு இவர்களை விட சிறந்த எடுத்துக்காட்டு எவரும் இருக்க முடியாது
சிறிய
அளவு காணியாக இருந்தாலும் தோட்ட செய்கை மாடு வளர்பு சேதன பசளை தயாரிப்பு
கோழி வளர்பு என படிப்படியான முனேற்றத்தை நோக்கி செல்லும் இவர்களுக்கு
தொழிலுக்கான முதல் முதலாவது பிரசைனையாக உள்ளது
வாழ்வாதாரத்திற்கே
வழிதேடித்திரிந்த இவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகளின் சிறிய
சிறிய நிதிப்பங்களிப்பையும் வலிமையான தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு
தொடர்சியாக பயனித்து வருகின்றார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment