சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களுக்கு வெகு விரைவில் நடவடி்ககை......
அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கமொன்றின் பொறுப்பு என்பதால் இது தொடர்பாக வெகு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்தார்.
கடந்த 20 ஆம் திகதி நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தில் பந்தரா பாதுஸ் வகையை சேர்ந்த ஏழு வயதுடைய சிறுத்தையொன்று வில்லில் சிக்கி உயிரிழந்தது. கடந்த காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், அதன் எதிரொலியாக மிகவும் அரிய வகையிலான கறுப்பு சிறுத்தையொன்றை நாடு இழந்தமையை சுட்டிக்காட்டிய பிரதமர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை விழிப்பூட்டி மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதிருக்கும் வகையில் செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார்.
சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடும் நபர்களுக்கு எதிராக
சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்....
சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களுக்கு வெகு விரைவில் நடவடி்ககை......
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment