கொரோனாவிலிரந்து மீளமுன் புபோனிக் பிளேக் நோயின் அச்சுறுத்தல்.....
இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை காலம் தொடரும் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மனிதர்கள் மத்தியில் இந்த தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜூலை 1ம் தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் பதிவான நோய்கள், புபோனிக் பிளேக் என ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக கூறுகின்றனர். அதனால் மர்மோட் இறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும்
கொறித்து திண்ணும் உயிரினங்களால் பரவுகிறது. இதற்கு உரிய சிகிச்சை
அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும்
என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன...
கொரோனாவிலிரந்து மீளமுன் புபோனிக் பிளேக் நோயின் அச்சுறுத்தல்.....
Reviewed by Author
on
July 06, 2020
Rating:

No comments:
Post a Comment