மன்னார் மாவட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக கடற்படையினரின் கெடு
பிடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமையினால் மீனவர்கள் கடலில் உரிய
நேரத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-இவ்விடையம்
தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
-நாட்டில்
ஏற்பட்டுள்ள 'கொரோனா' தாக்கத்தின் காரணமாக கடற்பிராந்தியங்களில்
கடற்படையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் மன்னார்
தீவில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடற்படையினரின் கடுமையான
சோதனை நடவடிக்கைகளினால் பாதீப்படைந்துள்ளனர்.
-தொடர்ச்சியாக
பாதீக்கப்பட்டிருந்த மீனவர்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி மீன்
பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலில்
கடற்படையினரினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றது.
-இதனால் மீனவர்கள் உரிய
நேரத்திற்கு கடலுக்குச் சென்று மீண்டும் உரிய நேரத்தில் கரை திரும்ப
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் பாதீக்கப்படுகின்றனர்.
-நேற்று
செவ்வாய் கிழமை காலை மன்னார் பிரதான பாத்தடியில் இருந்து கடற்படையின்
சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தொழிலுக்கு கொண்டு செல்லுகின்ற
ஆவணங்களும் பரிசீலினை செய்த பின் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மீது
கடற்படையினர் கடலில் வைத்து தாக்கியுள்ளனர்.
-இதனால் மீனவர் ஒருவரும் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அன்றைய நாள் பல மீனவர்களின் கடல் தொழில் நடவடிக்கைகள் பாதீக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் இனி இடம் பெறக்கூடாது.
-மன்னார்
மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக கடல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட ஜனாதிபதி
மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும்
தெரிவித்தார். ..
மன்னார் மாவட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment