மன்னார் வங்கி முகாமையாளர்கள் மற்றும் பொறுப்பான அரச அதிகாரிகளின் ஆக்கபூரவமான செயற்பாட்டை எதிர்பார்த்து.........
மன்னார் மாவட்டத்தின் பிரதான பேரூந்து நிலையத்தை சூழவுள்ள பிரதான பஸார் கடை தொகுதிக்கு அடுத்ததாக மக்கள் அடர்த்தி கூடியதாகவும் விற்பனை நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதி மன்னார் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியாகும்
இப்பகுதியை சூழ எமில் நகர் பனங்கட்டு கொட்டு சாந்திபுரம் ஜிம்றோன் நகர் ஜீவ புரம் போன்ற பகுதிகள் காணப்படுகின்றது மன்னார் பிரதான பஸார் பகுதிக்கு அடுத்ததாக அதிகளாவான மக்கள் நடமாட்டம் காணப்படுவதுடன் அதிகளவான சில்லறைக்கடைகள் மருந்தகங்கள் உணவகங்கள் என இரண்டவது பிரதான பஸார் பகுதியாக வைத்திய சாலையை சூழவுள்ள பகுதி காணப்படுகின்றது
இருப்பினும் குறித்த பகுதியையும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் மக்களின் அவசர தேவைக்கு என பணம் பெற்றுக்கொள்வதற்கோ பணம் மீள பெறுவதற்கோ எந்த ஒரு வங்கி கிளையோ அல்லது வங்கி உபகாரியாலயமோ ஏன் ஒரு ATM வசதி கூட இல்லாமையால் அப் பகுதி மக்கள் மாத்திரம் இன்றி அவ் பகுதிக்கு என வியாபார நடவடிக்கை மருத்துவ தேவைகளுக்கு வருபவர்கள் கூட மிகவும் சிரமத்தை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக வேறு பகுதிகளில் இருந்து மருத்துவ தேவைக்கு என வருபவர்கள் அவசர வைத்திய சாலை நடை முறைக்கோ உணவு வாங்குவதற்கோ பணம் பெறுவதற்கு மன்னார் நகர் மத்திய பகுதிக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது
குறித்த வைத்திய சாலையில் இருந்து பணம் பெறுவதற்கான வங்கி கிளைக்கு செல்ல வேண்டுமாயின் சில கிலோ மீற்றர்கள் செல்ல வேண்டிய சூழல் காணப்படுகின்றமையால் பொது மக்கள் வீண் அலச்சலுக்கும் ஆள் ஆகின்றனர்
எனவே மக்களின் நிலை அறிந்து வைத்திய சாலை வளாகத்திற்குள்ளோ அல்லது அப்பகுதியை அண்டிய பகுதியிலோ மக்களின் அவசர தேவைக்கு என பணம் மீள பெறுவதற்காண ஒரு ஏற்பாட்டை வங்கி கிளைகள் மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.....
எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள வங்கி முகாமையாளர்கள் மற்றும் பொறுப்பான அரச அதிகாரிகளின் ஆக்கபூரவமான செயற்பாட்டை எதிர்பார்த்து
பொறுப்புடனும் பொது நலனுடமும் காத்திருக்கும்
நீயு மன்னார் இணைய குழுமம்..
மன்னார் வங்கி முகாமையாளர்கள் மற்றும் பொறுப்பான அரச அதிகாரிகளின் ஆக்கபூரவமான செயற்பாட்டை எதிர்பார்த்து.........
Reviewed by Author
on
July 09, 2020
Rating:
No comments:
Post a Comment