அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த பதிலடி...செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்............
விட்டு வெளியேறியுள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) காலக்கெடுவுக்கு முன்னர், ஊழியர்கள் கட்டடத்தை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது தூதரகத்தில் பறக்கவிடப்பட்ருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.
காலக்கெடு முடிந்ததும் சீன ஊழியர்கள் கட்டடத்திற்குள் நுழைந்து பொறுப்பேற்றனர் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச்சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள சீனத்துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் நீண்டு கொண்டிருக்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகின்றமை முக்கியமான விடயமாகும்...
அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த பதிலடி...செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்............
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment