கொரோனாவால் மூடப்பட்ட மலேசிய எல்லை: தாய்லாந்தில் கைதான மியான்மர் குடியேறிகள்.
மலேசியாவுக்கு சென்றடையும் 10 மியான்மர் குடியேறிகளின் முயற்சி, கொரோனா எல்லை மூடல் நடவடிக்கையினால் குழம்பிய நிலையில் அவர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவுக்கு செல்வதற்காக தாய்லாந்து சென்ற இவர்கள், மலேசிய பயணம் குழம்பியதால் மியான்மருக்கே மீண்டும் திரும்ப முயற்சித்த நிலையில் அந்நாட்டு காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
மலேசிய எல்லை அருகே உள்ள Narathiwat (தாய்லாந்து) பகுதியிலிருந்து Bangkok நகருக்கு இக்குடியேறிகள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பொழுது, நடு வழியில் Chumpon (தாய்லாந்து) மாகாண காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் போலியான கடவுச்சீட்டுகள் மூலம் மலேசியாவுக்குள் நுழைய முயன்றதும் கொரோனா காரணமாக எல்லை மூடப்பட்டதால் எல்லைப்பகுதியிலேயே தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
சம்பளம், பெருந்தொற்று சூழலினால் சிரமங்களை எதிர்கொண்ட இவர்கள், சொந்த நாடான மியான்மருக்கு மீண்டும் திரும்ப முயன்ற பொழுது தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...

No comments:
Post a Comment