19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு
தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 17 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்ப்பில் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்ப்பில்
தவராசா கலையரசனின் பெயரும்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்ப்பில்
செல்வராசா கஜேந்திரனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில்
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
சாகர காரியவசம்,
அஜித் நிவாட் கப்ரால்,
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,
மஞ்சுள திஸாநாயக்க,
பேராசிரியர் ரஞ்சித் பண்டார,
பேராசிரியர் சரித ஹேரத், கெவிந்து குமாரதுங்க,
மொஹமட் முசாமில்,
பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
பொறியியலாளர் யாமினி குணவர்தன,
கலாநிதி சுரேந்திர ராகவன்,
டிரான் அல்விஸ்,
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல,
ஜயந்த கெடுகொட
மற்றும் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
August 11, 2020
Rating:


No comments:
Post a Comment