க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கால எல்லையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்தார்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் நிறைவடையவிருந்ததாக அவர் கூறினார்.
இதனடிப்படையில், பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு
Reviewed by Author
on
August 21, 2020
Rating:

No comments:
Post a Comment