நியூ மன்னாரின் பொறுப்பும் பொதுநலனூடாக -மன்னார் நகரசபை எல்லைக்கு உட்பட்ட கழிவுநீர் ஓடைக்கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமை தொடர்பாக...
மன்னாரின் நகர பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் மன்னார் நகரசபை மற்றும் அதில் பணி புரியும் சுகாதார தொண்டர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
கொரோனா அச்சுறுத்தல் சமயங்களில் கூட நகரசபை மற்றும் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் தங்களின் பாதுகாப்பை கூட கருத்தில் கொள்ளாது நகரத்தின் சுத்தத்தை கருத்தில் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளையும் கிரு தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுருந்தனர்.
இவ்வாறான திறமையான செயற்பாடுகள் இருப்பினும் மன்னார் நகரசபை எல்லைக்கு உட்பட்ட கால்வாய்களை சுத்தம் செய்வதில் சில குறைபாடுகள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக மன்னார் நகர எல்லைக்குள் காணப்படும் கழிவு நீர் கால்வாய்கள் உரியமுறையில் கவனக்கப்படுவதில்லை எனவும் அதே நேரத்தில் கால்வாய்களை சுத்தம் செய்து அதில் காணப்படும் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் கால்வாய்க்கு அருகிலே போட்டு விட்டு செல்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
சில பிரதான பாதைகளில் காணப்படும் கால்வாய்களிலும் இதே நிலை காணப்படுகின்றது வாய்கால் மற்றும் வடிகாண்களில் தேங்கும் கழிவுகளை அகற்றும் துப்பரவு பணியாளர்கள் அதை வீதிகளிலே விட்டு செல்வதாகவும் அதனால் துர்நாற்றம் தொடர்சியாக வீசுவதாகவும் மீண்டும் மழையோ காற்றோ வீசும் போது அப்புறப்படுத்திய கழிவுகள் வடிகாண்களுக்குள்ளே செல்வதாகவும் விலங்குகளும் பல நேரங்களில் அவ்வாறன சாக்கடைகளிவுகளை கிளறுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் அகற்றும் கழிவுகளை முற்று முழுதாக அப்புறப்படுத்தி தறுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
அதே நேரத்தில் சில வடிகான்கள் துப்பரவு மேற்கொள்வதற்காக அதன் மூடிகள் கலட்டப்பட்டாலும் அவை ஒழுங்கான முறையில் மூடப்படாமையையும் காணக்கூடியதாக உள்ளது அதே நேரத்தில் பல காண்கள் மூடிகளே இல்லாமலும் மூடிகள் உடைக்கப்பட்டும் காணப்படுகின்றது எனவே அவ்வாறான பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கான வாய்புக்கள் காணப்பட்டாலும் சில நபர்கள் அவ்வாறன பாதுகாப்பற்ற காண்களில் தவறிவிழுந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது
எனவே மன்னார் நகரசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொறுப்புடனும் பொது நலனுடமும் நியூமன்னார் குழுமம் கேட்டுக்கொள்கின்றது
No comments:
Post a Comment