மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக மஸ்தான் நிஜமனம்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக வன்னி தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் காதர் மாஸ்தான் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்
கண்டியில் இடம் பெற்ற அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்விலேயே மேற்படி நியமனம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் யாழ்மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுகந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட அங்கஜன் ராமனாதனுக்கும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவராக குலசிங்கம் திலீபன் அவர்களுக்கும் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக மஸ்தான் நிஜமனம்
Reviewed by Admin
on
August 12, 2020
Rating:

No comments:
Post a Comment