-மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை-பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை முன்னெடுப்பு-
மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் நேற்று வியாழக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாத்தியில் நேற்று வியாழக்கிழமை காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் போது நேற்று வியாழக்கிழமை மதியம் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்த நிலையில், குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
சடலாமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பாக இத எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
குறித்த, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரி பாதணி ,கையுரை உட்பட சில தடையப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மன்னாரை சேர்ந்தவரா?அல்லது வேறு மாவட்டத்தை சேர்ந்தவரா? என்பது தொடர்பாகவும்,குறித்த பெண் குறித்த இடத்திற்கு எவ்வாறு வந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா?என்பது தொடர்பாக மன்னார் பொலிஸார் புலன் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை-பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை முன்னெடுப்பு-
-மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை-பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை முன்னெடுப்பு-
Reviewed by Admin
on
August 14, 2020
Rating:

No comments:
Post a Comment