எதிர்கால சந்ததியினருக்கு உரித்தானவற்றை விற்பனை செய்வதற்கு எந்தவொரு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை
தங்கல்ல பிரதேசத்தில் இன்று (2020.08.02) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தின் போது கருத்து
தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்றைய தினம் முழுவதும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு பிரசார
கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அம்பாந்தோட்டை லுணுகம்வெஹெர, சூரியவெவ, அம்பாந்தோட்டை, அம்பலந்தொட்ட, ரன்ன,வீரகெட்டிய, மெதமுலன, வலஸ்முல்லை, பெலியத்த ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் பிரதமர் கலந்துக் கொண்டார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்தது நாமே. அன்று இருந்த சூரியவெவ இல்லை இன்று இருப்பது. சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தினால் சூரியவெவ முழு உலகமும் அறியும் நகரமாக மாறியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இந்த விளையாட்டு மைதானத்தில் எந்தவொரு சர்வதேச போட்டியும் நடத்தப்படவில்லை. இந்த விளையாட்டு மைதானத்தை நாம் நிர்மாணித்தமையே இதற்கு காரணம். இவ்வாறானதொரு சர்வதேச விளையாட்டு மைதானத்தை ஏன் அமைத்தீர்கள் என பலரும் கேள்வி எழுப்பினர். கிராமம், நகரமொன்று வளர்ச்சி அடைவது அபிவிருத்தியின் ஊடாக என்பது அவர்களுக்கு மறந்துவிட்டது.
அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் கணனி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைத்தமை தொடர்பிலும் கடந்த ஆட்சியாளர்களுக்கு பாரிய பிரச்சினை நிலவியது. தொழிற்சாலையை நிறுவியவரை நாற்பது தடவைகளுக்கு மேலாக எஃப்.சி.ஐ.டி க்கு அழைத்து சென்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்து எதிர்கால சந்ததியினருக்கு
உரித்தானவற்றை விற்பனை செய்வதற்கு எந்தவொரு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை.கடந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் இருந்த போதிலும், அவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது போனது. அவர்கள் இது குறித்து பேசக்கூட இல்லை. பொறுப்பற்றவர்களுக்கு அதிகாரம்
வழங்கினால் இவ்வாறுதான் நடக்கும்.
சஜித் பிரேமதாச குறித்தும் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் சஜித்
உறுதியாக தோல்வியடைந்திருப்பார். அதனால் அவருக்கு உதவி செய்த அம்பாந்தோட்டைமாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கைவிட்டு கொழும்பிற்கு சென்றார். அம்பாந்தோட்டையின் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இன்று ஆதரவற்று காணப்படுகின்றனர்.
கடந்த சில காலங்களாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பலர் வந்து என்னை சந்தித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தனர். அவர்களுக்கு வேறு செய்வதற்கு ஒன்றும் இல்லையாம். சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்றவே அவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர். பொதுத் தேர்தலொன்றை நடத்தி மக்கள் வாக்களிப்பது கட்சியொன்று கட்சியின் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு அதிகாரம் வழங்குவதற்கு அல்ல என்பதும் அவர்களுக்கு மறந்து போயுள்ளது. மக்கள் வாக்குகளை வழங்குவது நாட்டை கட்டியெழுப்புவதற்கு உரியவர்களை தெரிவு செய்வதற்கே.
தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. புதிய கட்டுக்கதையாக உருவாகிவருவது கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை மீளப் பெற்றுக் கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நிலவி வருகிறது என்பதே. நிதி அமைச்சர் என்ற வகையில் இப்போது நான் உங்களுக்கு கூற விரும்புவது, அந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை மீளப் பெற்றுக் கொள்வதற்கான எந்த எண்ணமும் எமக்கு இல்லை. சமுர்த்தி கொடுப்பனவில் கழிக்கப்படுவதாகவும் கட்டுக்கதையொன்று காணப்படுவதாக அறிய கிடைத்தது. அவ்வாறு கழிப்பதற்கோ அல்லது மீள பெற்றுக் கொள்வதற்கோ எந்த நடவடிக்கையும்
ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என இச்சந்தர்ப்பத்தில் நான் உறுதி கூறுகிறேன்.
இதுவரையில் இலங்கையின் பிரசித்தமான மற்றும் பலமான அரசியல் கட்சியாக இருப்பது எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். அதனால் எமது உறுதியான வெற்றியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் அதற்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்புவதற்கு முயற்சிக்கின்றனர். அதனால் அவ்வாறான கட்டுக்கதைகளுக்கு ஏமாறாமல் உங்களது பெறுமதியான வாக்குகளையும் மற்றும் விருப்பு வாக்குகளையும்
மொட்டு கட்சிக்கு வழங்குமாறு நான் உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்காக வேலை செய்வதற்கு தயாராகவுள்ள வேலை செய்வதற்கான திறன் கொண்ட தலைவராவார். அவர் வேலை செய்வதற்கு தயாராக இருக்கிறார். அதனால் அவருக்கு வேலை செய்யக்கூடிய, வேலை செய்வதற்கான திறமை உள்ளவர்களுக்காக உங்களது வாக்குகளை பாவித்து நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பை வழங்குங்கள். நாங்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நூறிற்கு நூறு வீதம் மின்சாரத்தை பெற்றுக் கொடுத்தோம். அதேபோன்று நாம் எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்கியதன் பின்னர் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை
எடுப்போம்.
இன்று இலங்கையில் பெரும்பாலானோர் பெண்களாக காணப்படுகின்றனர். பெண்களை பலப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கு சுயதொழிலுக்காக குறைந்த வட்டியிலான கடன்களை பெற்றுக் கொடுத்தல், அதற்கான அறிவூட்டலை வழங்கல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அதேபோன்று பெண்கள், பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்காக
தற்போதுள்ள சட்டங்களை திருத்தி புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாவதையும் நாம் தடுக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரம் பாதாள உலகக் குழுவினராலேயே செயற்படுத்தப்படுகிறது. நாங்கள் இவை இரண்டையும் இல்லாதொழிக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். தற்போது போதைப்பொருள் வியாபாரம் கிராமங்களிலும் பரவியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்களை பாதுகாப்பதற்கு ஒருபோதும் எமது அரசாங்கம் தயார் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் கொவிட் வைரஸ் தொடர்பிலும் வைரஸை இல்லாதொழிக்க ஜனாதிபதி மேற்கொண்ட வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்க
வேண்டும்.
உலகின் பெரும்பாலான தலைவர்கள் இந்த வைரஸிற்கு மத்தியில் ஆதரவற்றவர்களாயினர்.எமது நாட்டின் இராணுவம் மற்றும் சுகாதார பிரிவினர் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை ஒழித்தனர். இவை அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிரடியாக உரிய தருணத்தில் உரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே
சாத்தியமாகியது. அந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு சுகாதார ஆலோசனைகளை ஏற்று மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நாம்
பாராட்டுகிறோம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்காவிடின் ஆட்சியாளர்கள்
சிறந்த தீர்மானம் மேற்கொண்டாலும் எந்த பிரயோசனமும் இருந்திருக்காது.
இம்முறை காணப்படுவது தீர்மானம் மிக்க தேர்தலாகும். முதலில் மொட்டு
சின்னத்திற்கு முன்னால் புள்ளடி இட்டு உங்களது வாக்கை செலுத்துங்கள்.
பின்னர் நீங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை
பெற்றுக் கொடுங்கள். உங்களது வாக்களிக்கும் உரிமையை ஒருபோதும் இழந்துவிட வேண்டாம் என்றும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்..
எதிர்கால சந்ததியினருக்கு உரித்தானவற்றை விற்பனை செய்வதற்கு எந்தவொரு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை
Reviewed by Author
on
August 03, 2020
Rating:

No comments:
Post a Comment