Facebook ஊடாக முன்னெடுக்கப்பட்ட திருட்டு வியாபாரம்
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்து வந்த நால்வர் கம்பஹா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் திருடிய 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் முகப்புத்தகத்தின் ஊடாக குறைந்த விலையில் திருடிய வாகனங்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Facebook ஊடாக முன்னெடுக்கப்பட்ட திருட்டு வியாபாரம்
Reviewed by NEWMANNAR
on
August 28, 2020
Rating:

No comments:
Post a Comment