உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது......
எல்லைப் பாதுகாப்புப் படையினருக்காக UBGL எனப்படும் கையெறி குண்டுகளுடன் கூடிய துப்பாக்கிகளை புனே ஆயுத தொழிற்சாலை தயாரித்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்தத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இன்சாஸ் ரக துப்பாக்கிகளுடன் 40 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட எறிகுண்டுகளையும் இதன் மூலம் ஏவமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எறிகுண்டுகளைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 30 மீட்டர் தூரமும், அதிகபட்சம் 400 மீட்டர் தூரமும் இலக்கு வைத்து சுட முடியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்திய இராணுவத்தில் உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக இராணுவத்தின் செய்தித் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment