அரசாங்கத்தை நம்ப வேண்டாம்... சுய பாதுகாப்பில் ஈடுபடுங்கள்...... - மு.க.ஸ்டாலின்
அரசை நம்பாமல் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘சுய பாதுகாப்பு’ நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்குதான் ஒரே தீர்வு என்று அ.தி.மு.க. அரசு கூறியது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஓகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.
பள்ளி – கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து, கோயில்கள் தவிர எல்லாம் செயற்பட அனுமதித்துவிட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து இருக்க முடியாது.
இந்தக் கண்துடைப்பு நாடகத்தின் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் அவர்கள் கண்ட பலன். இவ்வளவுக்குப் பிறகும் கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை.
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘சுய பாதுகாப்பு’ நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்
என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் அது ஒன்றுதான் உயிர்ப் பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது” என அவர் மேலும்
தெரிவவித்துள்ளார்.

No comments:
Post a Comment