புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்த்திருந்த மாநாடு.......
புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்த்திருந்தம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
மாநாட்டில் பல துறைகள் கொண்ட வருங்காலத்தை எதிர் நோக்கக் கூடிய கல்வி, தரமான ஆய்வு, கல்வியில் மேலும் சிறந்த இடத்தை அடைவதற்காக தொழில்நுட்பத்தையும் கல்வியில் சேர்த்தல் போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை குறித்த நிகழ்வில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது...
Reviewed by Author
on
August 07, 2020
Rating:


No comments:
Post a Comment