முல்லைத்தீவு வாகன விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு......
முல்லைத்தீவு- மல்லாவி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மல்லாவி பகுதியைச் சேர்ந்த தாணுயன் (வயது 19 ) என்ற இளைஞரே நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, மடுவிலிருந்து மல்லாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.
விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் மல்லாவி பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்
நேற்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment