பேச்சுவார்த்தைக்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பேச்சுவார்த்தைக்கு தயார் என அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தபடுமானால் அதற்கு எமது தரப்பும் தயாராகவுள்ளது.
அனைவரது கருத்துக்களையும் இணைத்து கொண்டு பயணிப்பது அவசியமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் கருத்துகள் மற்றும் தீர்மானங்கள் காணப்படுமாயின் தாம் அதனை சிறந்த ஒரு விடயமாக நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Author
on
August 13, 2020
Rating:


No comments:
Post a Comment