முள்ளிவாய்க்காலில் அஞ்சலிப் பிரமாணத்தை செலுத்தி தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கிய சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா.....
இன்று காலை 11 மணியளவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், அணியின் தலைவருமான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி க. வி. விக்கினேஸ்வரன் ஐயா முள்ளிவாய்க்கால் 'தியாகிகள் நினைவு முன்றலில்' தீபம் ஏற்றியதோடு அஞ்சலிப் பிரமாணத்தை செலுத்தி தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டணியின் துணைத்தலைவரும் மற்றும் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மற்றும் கூட்டணியின் வேட்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது...
முள்ளிவாய்க்காலில் அஞ்சலிப் பிரமாணத்தை செலுத்தி தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கிய சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா.....
Reviewed by Author
on
August 13, 2020
Rating:

No comments:
Post a Comment