அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரின் பெயர் உள்வாங்கப்படவில்லை...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பகீர் மர்கார், திஸ்ஸ அத்தநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, மயந்த திசாநாயக்க, எரான் விக்ரமரத்ன, டயனா கமகே ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்காக தேசிய பட்டியலில் ஏழு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றது. இதில் 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கும் ஏனைய 3 ஆசனங்களை தமிழ் முற்போக்கு  கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கமாறு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் கோரியிருந்ததாகவும் அதற்கு அவர் இணங்கியதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆதவனுக்கு  தெரிவித்திருந்தார்.

அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டிய நிலை ஏற்படுமெனவும் மனோ கணேசன் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரின் பெயர் உள்வாங்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்....


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரின் பெயர் உள்வாங்கப்படவில்லை... Reviewed by Author on August 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.