மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்த அமைச்சுப்பதவியும் இல்லை.....
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் கிடைக்கவில்லை. 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நிறைவடைந்துள்ளன..
கடந்த அரசாங்கத்தில் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த எஸ்.பி.திசாநாயக்க சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேறிருந்த சுசில் பிரேமஜயந்தவிற்கும் புதிய அமைச்சரவையில்
எந்தபதவிகளும் வழங்கப்படவில்லை.
அத்தோடு மூத்த அரசியல்வாதிகளான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷனா யாபா, ரஞ்சித் சியம்பலபிட்டிய, மஹிந்த சரமசிங்க ஆகியோருக்கும் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:
Post a Comment