மன்னார் பஸார் பகுதியில் மஞ்சள் தூள் பதுக்கி வைத்து அதி கூடிய விலைக்கு விற்பனை- பாவனையாளர்கள் கவலை
மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூள்
பதுக்கி வைக்கப்பட்டு அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக
பாவனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-மன்னார்
பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் 100 கிராம் மஞ்சள் தூள்
350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
-ஒரு
கிலோ மஞ்சள் தூள் 3500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பதுக்கி வைத்து
விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-நாட்டில்
மஞ்சள் தூளிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பாரிய அளவில் இலாபத்தை
பெற்றுக் கொள்ளும் வகையில் அதிகரித்த விலைக்கு மன்னாரில் பஸார் பகுதியில்
உள்ள வர்த்தகர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
-இதே வேளை விற்பனை செய்யப்படும் மஞ்சளில் பெரும்பாலானவற்றில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளுக்கு
ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மாவுடன் வர்ணங்களை கலந்து விற்பனை
செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதற்கமைய,
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சளின் மாதிரிகள் பெற்றுக்
கொள்ளப்பட்டு, அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டிருந்தது.
அரச
இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில்
மஞ்சள் தூளின் அரைவாசியில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை
தெரியவந்துள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் மஞ்சள் தூள் பதுக்கி வைத்து அதி கூடிய விலைக்கு விற்பனை- பாவனையாளர்கள் கவலை
Reviewed by Author
on
August 17, 2020
Rating:

No comments:
Post a Comment