இதுவரை 19 பேர் மீட்பு; எண்ணெய் கசிந்தால் பாரிய பாதிப்பு ஏற்படலாம்!
அம்பாறை – சங்கமன் கந்த கடற்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் இன்று (03) காலை தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் இருந்து இதுவரை 19 பேர் மீட்கப்படுள்ளனர்.
மேலும் நால்வரை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் கப்டன் மற்றும் ஊழியர் ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு கடற்படையினரின் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை இந்தக் கப்பலில் இருந்து எண்ணெய் வௌியேறுமாக இருந்தால் நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது.
இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்ய கடற்படை கப்பல்களும் உதவி வருவதுடன், இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக இலங்கை கடற்படைக்கு உதவுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
 
        Reviewed by Author
        on 
        
September 03, 2020
 
        Rating: 



No comments:
Post a Comment