ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியாவிற்குள் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: அமேசான் அறிவிப்பு
இணையதள வணிகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் அமேசான் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியாவிற்குள் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளீர்க்கும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பகம், பொருட்கள் பிரித்துவைக்கும் மையங்கள், வினியோகம் செய்யும் நிலையங்கள், அலுவலகப் பணி போன்றவற்றிற்காக 3,000 புதிய பணியாளர்கள் ஏற்னகவே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் அமேசான் குறிப்பிட்டுள்ளது.
இணையதள வணிக தேவை அதிகரிப்பதால் 16,000பேரை புதிதாக சேர்க்கப்போவதாக டெஸ்கோ கூறிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமேசான் அறிவிப்பை வணிகச் செயலாளர் அலோக் சர்மா வரவேற்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இது பல வணிகங்களுக்கு ஒரு சவாலான நேரமாக இருந்தபோதிலும், அமேசான் இந்த ஆண்டு பிரித்தானியாவில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது” என கூறினார்.
புதிய வேலைவாய்ப்புகள் மூலம், நிரந்தர பிரித்தானிய பணியாளர்களின் எண்ணிக்கை 40,000க்கும் அதிகமாக உயரவுள்ளது.
அதேநேரத்தில் அமேசானின் அறிவிப்பைத் தொடர்ந்து, காபி தொகுதியான கோஸ்டா பிரித்தானியாவில் 1,650பேரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment