அடம்பன் பங்கின் தாய்க்கோவில் புனித வியாகுல மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அடம்பன் பங்கின் தாய்க்கோவில் புனித வியாகுல மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மடு மறைக்கோட்டத்தைச் சேர்ந்த அடம்பன் பங்கின் தாய்க் கோவிலான புனித வியாகுல மாதா ஆலய வருடாந்தத் திருவிழாத் திருப்பலி மறைமாவட்ட வழிபாடு மற்றும் இளைஞர் ஆணைக்குழுக்களின் இயக்குனர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது முன்னை நாள் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. சேவியர் குரூஸ் அடிகளார், மறைமாவட்ட மூத்தோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி. ஒல்பன் இராஜசிங்கம் அடிகளார், அந்தோனியார்புரம் பங்கின் பங்குத்தந்தை அருட்பணி. பெயிலன் குரூஸ் அடிகளார், அடம்பன் இயேசு சபைத் துறவற இல்லத்தின் முதல்வர் அருட்பணி. ரோய் அடிகளார், அருட்சகோதர சகோதரிகள், இறைமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
திருச்சுருவப் பவணியின் பின்னர் முன்னை நாள் குருமுதல்வர் அருட்பணி. சேவியர் குரூஸ் அடிகளார் அன்னையின் திருச்சுரூவ ஆசீர்வாதம் வழங்கினார்.
பங்குத்தந்தை அருட்பணி. நவரெட்ணம் அடிகளார் திருவிழாவிற்கான ஒழுங்குகளை பங்கு அருட்பணிப் பேரவை மற்றும் இறைமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
Via Mannar Catholic Media

No comments:
Post a Comment