நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு.
நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு.
(மன்னார் நிருபர்)
(3-09-2020)
நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) காலை 9.45 மணியளவில் நானாட்டான் பிரதேசச் செயலாளரின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நானாட்டான் பிரதேசத்தின் பல்வேறு அரிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக நானாட்டான் பிரதேசத்தின் கல்வி, நீர்பாசன திட்டம், விவசாயம், கால்நடை, சுகாதாரம், வைத்திய சேவை, போக்குவரத்து, குடி நீர் , வீதி அபிவிருத்த உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளை பாதீக்காத வகையில் கால்நடைகளை பராமறித்து,உரிய மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
-மேலும் தடைப்பட்டுள்ள மற்றும் இடை நடுவில் விடப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் முழுமையாக்கப்பட வேண்டும் என அதிகாரிகளினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர், உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்கள்,கல்நடை,விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு.
Reviewed by Author
on
September 03, 2020
Rating:

No comments:
Post a Comment