ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவிஷீல்டு பரிசோதனை பாதுகாப்பானது எனவும், மீண்டும் சோதனைகளை தொடரலாம் எனவும் இங்கிலாந்தின் மருந்தக ஒழுங்குமுறை மேலாணையம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டிருப்பதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:

No comments:
Post a Comment