மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காப்பற் வீதி அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு-
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காப்பற் வீதி அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு-
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் ஆரம்பித்து வைப்பு.
(மன்னார் நிருபர்)
(04-09-2020)
நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காப்பற் வீதி அமைக்கும் திட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(4) காலை மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வேளைத்திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வேளைத்திட்டம் முதற் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோதி நகர் 2ஆம் கட்டை கிராமத்தில் உள்ளக பிரதான வீதி அமைப்பதற்கான வேளைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சோதி நகர் 2ஆம் கட்டை கிராம மக்கள், கிராம அலுவலகர், உற்பட அழைக்கப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாடாளாவிய ரீதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் தூரம் கொண்ட காப்பற் வீதி அமைக்கும் திட்டம் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோதி நகர் 2ஆம் கட்டை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment