நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி!
தே.மு.தி.கவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 15ம் திகதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி!
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment