சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது
தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவுடன் இணைந்து ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 01 கிராம் மற்றும் 538 மில்லிகிராம் ஹெரோயினுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தலைமன்னார் ரிஷாட் நகர் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த 280 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒரு சந்தேக நபரை மன்னார் பிரதேச ஊழல் தடுப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை கைது செய்தது.
இதற்கிடையில், மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஜா-ஹெல, தண்டுகம பாலம் அருகில் உள்ள சாலைத் தடையில் வைத்து பாதையில் பயணித்த ஒருவரிடமிருந்து 03 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
அதன் பின் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த 08 கிராம் மற்றும் 91 மில்லிகிராம் தேசிய கஞ்சாவுடன் ஒரு பெண்ணை வடமேற்கு கடற்படை கட்டளை கைது செய்தது.
சந்தேக நபர்கள் 17 முதல் 55 வயதுக்குட்பட்ட ஹம்பாந்தோட்டை, தலைமன்னார், ஜா-எல மற்றும் மாம்புரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களும் சட்டவிரோத பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை, தலைமன்னார், ஜா-எல மற்றும் நுரைச்சோலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment