தொடரும் சீரற்ற காலநிலை – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
குறித்த மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இவ்வாறு 100 மி.மீற்றர் வரை மழை வீழ்ச்சி தொடர்ந்தால் மண்சரிவு, பாறைகள் வீழ்தல் என்பனவற்றை அம்மாவட்டங்கள் எதிர்கொள்ள நேரிடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் சூழவுள்ள பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரத்தினபுரி மாவட்டத்தின் எல்பாத்த, எஹெலியகொட, இரத்தினபுரி, பெல்மதுளை, குருவிட்ட மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகள் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலை – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment