5 கடலாமைகளுடன் ஒருவர் கைது
கொழும்புத்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை இன்று அதிகாலை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வீட்டுக்குள் இருந்து ஐந்து கடமைகளை உயிருடன் மீட்டுள்ளார்கள்.
மீட்கப்பட்ட கடலாமைகள் மற்றும் கைது செய்யப்பட்டவரை நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள கடல் ஆமைகள் யாழ்ப்பாண குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
5 கடலாமைகளுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment