விளைவுகள் மோசமாக இருக்கும்! அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை
கடந்த 40 ஆண்டுகளில் தாய்வானுக்கு பயணம் மேற்கொண்ட அவரிடம் தாய்வான் புகார் வழங்கியிருந்தது.
சீனா தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுவதால் ஏனைய நாடுகள் இதனுடன் ராஜ்ஜிய தொடர்புகளை வைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
இதுகுறித்து சீன அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,"அமெரிக்காவும் தாய்வானும் சூழ்நிலையை குறைத்து மதிப்பிடக் கூடாது. மேலும் இந்த நடவடிக்கைகள் புரளி எனவும் நினைக்க வேண்டாம். எங்களை தொடர்ந்து கோபமூட்டினால், அது கண்டிப்பாக போரில்தான் முடியும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சீனா மோதலை தூண்டும் செயல்களில் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்கா தாய்வானுடன் நெருக்கமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட அமெரிக்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
விளைவுகள் மோசமாக இருக்கும்! அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment