ஆற்றுகைப்படுத்தல் நிலையம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு-Photos
மன்னார் அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட ஆற்றுகைப்படுத்தல் நிலையம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு
மன்னார் நிருபர்
15.09.2020
மன்னார் அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட ஆற்றுகைப்படுத்தல் நிலையம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
போதை பொருள் பாவனை காரணமாக மனதளவில் பாதிக்கப்படவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் முகமாகவும் அவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் சிகிச்சை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சீ.ஏ.மோகன்றாஸ் தலைமை இன்று 15 செவ்வாய்கிழமை காலை இடம் பெற்றது குறித்த நிகழ்வுக்கு கிராமிய வீடமைப்பு நிர்மாணதுறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பிரதான விருந்தினராக கலந்து கொண்டு 6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழு தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் தேசியவீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் திட்டமிடல் பணிப்பாளர் மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஆற்றுகைப்படுத்தல் நிலையம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
September 15, 2020
Rating:

No comments:
Post a Comment