அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொனிப்பொருளிலான சிறு வணிக தயாரிப்புக் கண்காட்சி

நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொனிப்பொருளிலான சிறு வணிக தயாரிப்புக் கண்காட்சி திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று(28) திங்கட்கிழமை இடம்பெற்றது. இன்ஸ்பையர்ட் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் சிறிய மத்தியதர முயற்சியாளர்களின் பொருளாதாரத்துடன் கூடிய சமூக ஒருங்கிணைவினை உயர்த்தும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதன்போது உற்பத்தி பொருற்களையும் அதன் வியாபாரிகளையும் ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தன அவர்கள் கண்காட்சியை ஆரம்பித்து உரையாற்றுகையில் திருகோணமலையை பொறுத்தவரையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் பனை பொருள் உற்பத்தி மற்றும் கைவினைப்பொருட்களுக்கு வெளி மாவட்டங்களில் பெரும் வரவேற்பிருக்கிறது. அதனால் எமது மாவட்டத்திற்கு உரித்தான உற்பத்திகளை வளர்த்துக்கொள்ளவும் சந்தைப்படுத்தவும் இது போன்ற செயற்திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன

இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டுமென சிறு முயட்சியாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.டி.எம் அஸங்க அபயவர்தன, அவர்களுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி.வணிகசிங்க, சர்வோதய சிரமதான இயக்கத்தின் மாகாண இணைப்பாளர் வீ.ஜீவராஜ், ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி யொகான் ரொபேர்ட் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.

 இந்த கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் பொருட்கள் இரு நாட்களுக்கு காண்பிக்கப்படவுள்ளதுடன் இங்கு விற்பனையும் இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொனிப்பொருளிலான சிறு வணிக தயாரிப்புக் கண்காட்சி Reviewed by Author on September 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.