மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாற்று பகுதியில் சட்ட விரோதமாக மூன்று இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்ட மணல் பொலிஸாரினால் மீட்பு.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாற்று பகுதியில் மூன்று இடங்களில் எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கியூப் மணலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) பொலிஸார் மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்க அவர்களின்; வழி காட்டலின் கீழ் மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த மணலை மீட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பாலியாறு காட்டுப்பகுதிக்குள் அனுமதிப் பத்திரமின்றி மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரண்டு இடங்களையும் , பாலியாறு ஊர் பகுதியில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த ஒரு களஞ்சிய இடத்தினையும், கண்டுபிடித்து பொலிசுமார் 45 கியூப் மணலை கைப்பற்றி உள்ளனர்.
ஸார் அவ்விடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத
இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும்,மன்னார் மாவட்டத்தில் முசலி,நானாட்டான்,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாற்று பகுதியில் சட்ட விரோதமாக மூன்று இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்ட மணல் பொலிஸாரினால் மீட்பு.
Reviewed by Author
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment