பஸ் முந்துரிமை வீதியில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி இல்லை
பஸ் முந்துரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக பஸ்கள் மற்றும் வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க, வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் ஏனைய வாகனங்கள் பயணிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வீதி ஒழுங்கு விதி நடைமுறையில் உள்ள கொழும்பின் 4 வீதிகளில் ஏனைய வாகனங்களும் பயணிக்க முடியுமா என்பது தொடர்பில் வினவியபோது, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள வீதிகளில் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கு வீதியில் பணிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
பஸ் முந்துரிமை வீதியில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி இல்லை
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment