கும்புறமூலை விபத்தில் இளைஞன் பலி!
கிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் (வயது-21) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது-48) என்பவரே காயமடைந்துள்ளார்.
கும்புறுமூலை பாசிக்குடா வீதியில் நேற்று (22) இரவு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புறமூலை விபத்தில் இளைஞன் பலி!
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment